2025 ஜூலை 07, திங்கட்கிழமை

700 பேருக்கு காணி ஆவணங்கள்

George   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், எஸ்.என்.நிபோஜன்  

கிளிநொச்சி, கரைச்சி பிரதேசத்தில், சுமார் 700 பேருக்கான காணி ஆவணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.  

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 700 பேருக்கே, இந்தக் காணி ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.  

கிளிநொச்சி மத்திய கல்லூரியில், வடக்கு மாகாண சபையும் கிளிநொச்சி மாவட்டச் செயலகமும் இணைந்து, சனிக்கிழமை (01) நடத்திய குறைநிவர்த்தி நடமாடும் சேவையின் போதே, இந்தக் காணி ஆவணங்கள் வழங்கபட்டன.  

ஏற்கெனேவே, காணிக் கச்சேரிகள் நடத்தப்பட்டு, பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையில் காணப்பட்ட பயனாளிகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்களையே, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கி வைத்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .