2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

300 பேருக்கு வீடமைப்புக்கான கடன் வழங்கி வைப்பு

Kogilavani   / 2016 ஜூலை 04 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

வீடமைப்பு கடன் திட்டத்தின் கீழ், கிளிநொச்சியில் 300 பயனாளிகளுக்கு  காசோலைகள் வழங்கும் நிகழ்வு,  கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில்  ஞாயிற்றுக்கிழமை(3) நடைபெற்றது.

'2025ஆம் ஆண்டு அனைவருக்கும் வீடு' என்ற தொனிப்பொருளின் கீழ், நாடளாவிய ரீதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக   கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் , பழைய வீடுகளில்  வசிப்பவர்கள்,  பெண் தலைமைத்துவ  குடும்பங்கள் எனும்  அடிப்படையில்   புதிதாக  வீடு  கட்டுதல் மற்றும் வீடுகளில் திருத்தப்பணியில் ஈடுபடும் சுமார் 300 குடும்பங்கள்   தலா 1 இலட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் வீடமைப்பு கடன் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .