2025 ஜூலை 05, சனிக்கிழமை

32 பேர் குடும்பங்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்

Niroshini   / 2016 ஜூன் 13 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 5 மாதங்களில் வவுனியா நீதிமன்ற சமுதாயம்சார் சீர்திருத்தத் திணைக்களத்தில் இருந்து 32 பேர் குடும்பங்களுடன் இணைந்து கொண்டுள்ளனர் என மாவட்ட சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் கே.எம்.நஜீம் தெரிவித்தார்.

சமுதாய சீர்திருத்த நடவடிக்கை குறித்து கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“வட மாகாணத்தில் நீதிமன்றங்களில் சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம் உயரிய நோக்குடன் குற்றமிழைத்தவர்களை சமூகத்தில் கௌரவமாகவும் நற்பிரஜையாகவும் வாழ வைக்கும் நோக்கில் பல்வேறு சமுதாய சீர்திருத்த அடையிலான வேலைகளை செய்து வருகின்றது.

அந்த வகையில், வவுனியா நீதிமன்ற வளாகத்தில் சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களம் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் நீதிமன்றத்தினால் சமுதாயம் சார் சீர்திருத்த பணிகளில் ஈடுபடுமாறு கட்டளையிடப்பட்ட 198 பேரில் 32 பேர் சமுதாயம் சார் சீர்திருத்த செயற்பாட்டை மேற்கொண்டு கட்டளைகளை நிறைவேற்றியமையால் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிலர் குற்றம் புரிந்து நீதிமன்றக்கு வரும் பட்சத்தில் அவர்களுக்கான தண்டப்பணம் அல்லது தண்டப்பணத்துடன் சிறை என வருகின்ற போது தண்டப்பணம் அல்லது சிறைத் தண்டனைக்கு பதிலாக சமுதாய சீர்திருத்த கட்டளை என நீதிமன்ற கட்டளையின் படி அவர்களை பொறுப்பேற்கும் சமுதாய சீர்திருத்த திணைக்களம் அவர்களுக்கான நேர்வழிகாட்டல்கள், சீர்திருத்தப் பணிகள், நிகழ்வுகள் விழிப்புணர்வுகள், தொழில் வழிகாட்டல்கள், வைத்திய ஆலோசனைகள், சிகிச்சைகள், தனியாள் அபிவிருத்திக் கருத்தரங்குகள், ஆற்றுப்படுத்தல்கள், சமய கருத்துக்கள் என்பவற்றை வழங்கி வருகின்றது.

இதனை பூர்த்தி செய்த 32 பேரே விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .