Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலியாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் கிளிநொச்சி உட்பட வடக்கின் பல பகுதிகளுக்கு நீர் வசதி கிட்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நிலையியற் கட்டளை 23/2இன் கீழ், நாடாளுமன்றத்தில் நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சாவிடம் வலியுறுத்தி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தை அண்டியுள்ள பறங்கியாற்றிலிருந்து பாலியாற்றுக்கு நீரை தொடர்புபடுத்துவதன் ஊடாக மாங்குளம், வவுனிக்குளம், கொல்லவிளான் குளம், கல்விலன்குளம், மல்லாவிக்குளம் போன்ற பாரிய குளங்கள் பயனடையும். அத்துடன், இத்திட்டத்தின் மூலமாக மாங்குளம், மன்னாரின் ஒரு பகுதி, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி மக்களினது குடிநீர்ப் பிரச்சினை தீர்க்கப்படுவதுடன், விவசாயம், கால்நடைகள் அபிவிருத்தி மற்றும் அதற்கேற்ற மேய்ச்சல் தரை உருவாக்கம் என்பன மேலும் ஊக்குவிக்கப்படும்.இதேவேளை, நிலத்தடி நீர் வளம் மேம்பாடடையும்.
எனவே, இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
“ஆரம்பத்தில் இத் திட்டமானது மகாவலித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தது. அதற்கமைய இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் வரையிலான காடழிப்பு இடம்பெறுவதால் அது எமது சுற்றுச் சூழலுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், இத் திட்டத்துக்குகு மாற்றீடாக, பறங்கியாற்றிலிருந்து கால்வாய் அமைத்து பாலியாற்றுக்கு நீரைக் கொண்டு வருவதன் மூலம் வடக்கு மாகாணத்தில் ஒரு கணிசமான பகுதியில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் சிறந்த அபிவிருத்தியை அடைவதற்கும் முடியும். இது சுற்றுச் சுழலுக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.
எமது மாவட்டங்களிலுள்ள நீர் வளங்கள் பயன்படுத்தப்படாமல் இன்று வரை பெருமளவு நிலங்கள் தரிசு நிலங்களாகவே காணப்படுகின்றன. எனவே, மேற்படித் திட்டம் தொடர்பில் உரிய அவதானமெடுத்து, அதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago