Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் ஆரம்ப பாடசாலையில், மலசலகூடம் இல்லாமல் தமது பிள்ளைகள் அவதிப்படுவதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையாக 96 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களின் அடிப்படை தேவையான மலசலகூடம் இல்லாமையால் பாடசாலை நேரங்களிலேயே மாணவர்கள் தமது வீடுகளிலுள்ள மலசலகூடங்களுக்குச் சென்று வருவதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
புதிதாக பாடசாலை கட்டடத் தொகுதி அமைக்கப்பட்ட போதிலும் மாணவர்களின் அடிப்படை தேவையான மலசல கூடம் அமைத்து கொடுக்காமை மாணவர்களின் கல்வியில் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது.
ஆகவே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் நலனைக் கருத்திற கொண்டு விரைவில் மலசல கூடம் அமைத்துத் தரும்படி மாணவர்களின் பெற்றோர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .