2025 ஜூலை 05, சனிக்கிழமை

67 மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ளனர்

Kogilavani   / 2016 ஜூன் 13 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, இராமநாதபுரம் கிழக்குப் பகுதியில் 67 மாணவர்கள் பாடசாலை கல்வியை விட்டு இடைவிலகியுள்ளதாக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்புறப் பாடசாலைகள் தவிர்ந்த பின் தங்கிய பாடசாலைகளின் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகும் நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக குடும்பங்களில் நிலவும் வறுமை, தொழில்கள் இல்லாத நிலை, குடும்ப வன்முறைகள் உள்ளிட்ட விடயங்கள் இவற்றுக்கு காரணமாக அமைகின்றன.

இந்நிலையில் கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்குப் பகுதியில் 67 மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகியுள்ளனர்.
இவர்களை மீள  பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .