Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 மே 25 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அழிவடைந்த சிறுபோக நெற்செய்கைக்கு பதிலாக மீள் பயிர்ச் செய்கை செய்யவுள்ள விவசாயிகள் 3 மாதகால நெல்லினங்களை பயன்படுத்துமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் புதன்கிழமை (25) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,
'மீள்பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் அதனை முடித்து, மீண்டும் காலபோக நெற்செய்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் காலபோக நெற்செய்கைக்கு முன்னதாக அறுவடை செய்யக்கூடிய வகையில் 3 மாதகால நெல்லினங்களை விதைப்புக்கு விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்' என்றார்.
இந்த வருடம் மேற்கொள்ளவுள்ள காலபோக நெற்செய்கைக்கு தேவையான விதை நெல்லைப் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கை, கடந்த வாரம் பெய்த மழையால் பெருமளவு அழிவடைந்தது. இதனால், விவசாயிகள் மீள் விதைப்பில் மீண்டும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .