2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

முதிரை மரக்குற்றிகளை மரக்கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

Niroshini   / 2016 ஜூன் 18 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளை மரக்கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, மரக்குற்றிகளை கடத்திய சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

நேற்று வெள்ளிக்கிழமை (17) அதிகாலை, வனவள திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, கிளிநொச்சி - அக்கராயன் 4ஆம் கட்டை பகுதியில் இருந்து வந்த லொறியை சோதனைக்குட்படுத்திபோது, தேங்காய்களுக்குள் சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியானமுதிரை மரக்குற்றிகளை கடத்திச்செல்லப்பட்டமை கண்டிப்பிடிக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்திபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .