2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மாற்றுவலுவுள்ளோா் சம்மேளத்துக்கு நிதியுதவி

George   / 2016 நவம்பர் 05 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோா் சம்மேளனத்தின்  நிா்வாகச்  செயற்பாடுகளுக்கு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமாா், 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கிவைத்துள்ளார்.

மாற்று வலுவுள்ளோா் சம்மேளனத்தின் தலைவா் நேசன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம், இந்த நிதி கையளிக்கப்பட்டுள்ளது.

3,286 மாற்றுவலுவுள்ளோா்களை கொண்டு செயற்பட்டு வரும்  மேற்படி சம்மேளனம், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மாற்று வலுவுள்ளோா் நலன்களில்  அக்கறை செலுத்தி வருகிறது.

இதன் போது கருத்து தெரிவித்த சந்திரகுமாா், “கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோா்கள் வாழ்வாதாரம் மற்றும் அவா்களின் நலன்கள் தொடா்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னுதாரணமாக பொது நிதியத்தை உருவாக்கி நிரந்தரமாக மாற்றுவலுவுள்ளோா்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

இதனை தனியே அரசின் பொறுப்பு எனக் கூறி ஒதுங்கி  நிற்க  முடியாது இது அனைவரினதும் கூட்டுப்பொறுப்பு. குறிப்பாக புலம் பெயா் அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் ஒன்று சோ்ந்து  செயற்பட வேண்டும் எனவே புலம் பெயா் உறவுகள், அமைப்புகள், வணக்கஸ்தலங்கள் என பலரும் மாற்று வலுவுள்ளோா் தொடா்பில் பணியாற்ற முன்வரவேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .