2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'மீள்குடியேறி ஒருமாதமாகியும் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை'

George   / 2017 ஏப்ரல் 03 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, பிலவுக்குடியிருப்பு பகுதியில் மக்கள் மீள்குடியேறி ஒருமாத காலமாகியும் இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில், மீள்குடியேறிய மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

கேப்பாப்புலவு கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள பிலவுக்குடியிருப்பு பகுதி மக்கள், தங்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி ஜனவரி மாதம் 31ஆம் திகதி முதல் பெப்ரவரி 28ஆம் திகதி வரையும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி, அந்த மக்களின் 42 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதுடன் 84 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறினர்.

இந்நிலையில், இவ்வாறு மீள்குடியேறிய மக்களுக்கான எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில் தரப்பாள் கொட்டகைகளில் அவர்கள் வசித்து வருகின்றனர்.

குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்ட கிராமவாசிகளுக்கு தேவையான வசதிகள் இன்னும் செய்துகொடுக்கப்படவில்லை.

மீள்குடியேறிய போது, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் உணவு தவிர்ந்த ஏனைய சில பொருட்கள் மாத்திரமே வழங்கப்பட்ட நிலையில், இதுவரை ​வேறு எந்தவித உதவிகளும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

தமது நிலத்தை ​​போராட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொண்டதால், தம்மை பழிவாங்கும் நோக்கில் அரசாங்கம், தமக்கான உதவிகளை நிராகரித்துவிட்டதாக சந்தேகிப்பதாக அந்த மக்கள் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .