Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மே 20 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
“கடந்த கால அரசங்கம் எங்களுக்கு கொடுமை செய்ததன் அடிப்படையிலே புதிய அரசாங்கத்தை எங்களது தலைமையில் தெரிவுசெய்து, ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுகின்ற அந்த வாய்ப்பை எங்களுடைய மக்கள் வழங்கியுள்ளனர்.
ஒரு ஜனநாயக நாடாக இன்று எங்களுடைய நாடு மலர்ந்திருக்கின்றது என்று கூறினால் அது நல்லாட்சியின் மகத்துவம் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட செயலக நிர்வாக கட்டடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “எங்களுடைய மாவட்டம் போரால் பாதிக்கப்பட்ட மாவட்டம்.போரால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்ற அடிப்படையிலே எங்களுடைய மக்களின் பிரச்சினைகள்,ஏராளமாக இருக்கின்றன.
மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு எங்களுடைய அமைச்சரவை அமைச்சர்கள் அடிக்கடி வர வேண்டும்.எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்மையில், எங்களுடைய மீள்குடியேற்ற அமைச்சர், கேப்பாப்புலவிலிருந்து இராணுவம் வெளியேறுவதற்கு, 50 இலட்சம் ரூபாயை இராணுவத்துக்கு வழங்கி அந்த மக்களுக்கு மீண்டும் சொந்த நிலங்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இப்படி நிலங்களை கொடுப்பதற்கான நடவடிக்கைளை அரசாங்கம் மேற்கொள்கின்றமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இருந்தாலும், கடற்படையினரிடம் இருந்து அண்மையில் முள்ளிக்குளம் கிராமம் விடுவிக்கப்பட்டுள்ள போதும், அந்த மக்கள் முழுமையாக தங்களுடைய இடங்களிலே குடியேற முடியாத நிலையில் உள்ளனர்.
காணாமல் போனவர்கள், சிறையில் உள்ளவர்கள், வேலையில்லாமல் துன்பப்படுகின்றவர்கள் என இப்படி எல்லாம் எமது ஜனநாயக போராட்டத்தின் ஊடாக உங்களிடம் பலன் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையுடன் போராட்டங்களை மேற்கொள்கின்றனர்.
அந்த வகையிலே போராட்டங்களை முன்னெடுக்கின்ற அந்த மக்கள் தமது போராட்டங்களை கைவிட்டு சக வாழ்வில் பங்கெடுக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்” என்றார்.
18 minute ago
33 minute ago
42 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
33 minute ago
42 minute ago
8 hours ago