Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 09 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா நகரசபைக்குக் காணப்பட்டு வரும் செயலாளர் வெற்றிடத்துக்கு அனுபவமும் செயற்றிறனும் உள்ள செயலாளரொருவரை நியமிக்குமாறு, வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் வர்த்தகர் சங்கமும் இணைந்து, வட மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளனர்.
வவுனியா வாடி வீட்டில் கடந்த வெள்ளிக்கழமை இடம்பெற்ற வரியிறுப்பாளர் சங்கத்துக்கும் வர்த்தகர் சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பின்போதே இவ் இணக்கப்பாடு எட்டப்பட்டு கோரிக்கை விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் செயலாளர், அண்மையில் யாழ்ப்பாணம் உள்ளூராட்சித் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து நகரசபையின் செயலளார் வெற்றிடம் காணப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக நகர சபையின் செயற்பாடுகளில் மந்த நிலை காணப்பட்டு வரும் நிலையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
30 minute ago
53 minute ago
1 hours ago