Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
George / 2016 ஜூன் 01 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
'கிளிநொச்சி மாவட்டத்தின் கூடுதலான வீட்டுத்தேவைகளை பூர்த்திச் செய்யும் ஆண்டாக இவ்வாண்டு உள்ளது' என மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் வீட்டுத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், 'எமது மாவட்டத்தை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு தேவைகள் காணப்படுகின்றன. இதில் வீட்டுத்தேவை என்பது மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கூடுதலான வீட்டுத்தேவைகளைப் பூர்த்திச் செய்யும் ஆண்டாக இந்த ஆண்டு உள்ளது. அதாவது பல்வேறு திட்டங்களினூடாக பல்;லாயிரக்கணக்கான வீடுகள் கிடைக்கவுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் 41,610 வீடுகள் தேவையாகவுள்ள நிலையில், 25,421 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 16,189 குடும்பங்களுக்கு வீடுகள் தேவையாகவுள்ளன.
இதனைவிட ஏற்கெனவே வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொண்ட பயனாளிகளில் வீடுகளைப் பூரணப்படுத்த விசேட பெண் தலைமைத்துவக் குடும்பங்களை இனங்கண்டு, அக்குடும்பங்களின் வீடுகளை பூரணப்படுத்தக் கூடிய வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, எதிர்காலத்தில் அவற்றை முன்னெடுக்க வேண்டும்' என்றும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago