Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியாவில் உள்ள பல வியாபார நிலையங்களில் ஒரு இறாத்தல் பாண் 60 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
புதிய அரசாங்கம் பதவியேற்றப் பின் பாணின் விலை குறைக்கப்பட்டு 54 ரூபாய் ஆக விற்கப்பட்டு வந்த நிலையில், கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக 4 ரூபாய் அதிகரித்து பாண் ஒரு இறாத்தல் 58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், வவுனியாவில் உள்ள பல வியாபார நிலையங்களிலும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 58 ரூபாய்க்கு பதிலாக 60 ரூபாய்கே பாண் ஒரு இறாத்தல் விற்பனை செய்யப்படுகின்றது. இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago