2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விழிப்பூட்டும் நடைபவனி

Niroshini   / 2016 ஜூன் 03 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்,எஸ்.என்.நிபோஜன்

தகைமை வாய்ந்த எவருமே விட்டுவிடப்படாத வாக்காளர் இடாப்பு ஒன்றை தயாரித்து கொள்ளுதல் எனும் தொனிப்பொருளில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வாக்காளர்களை விழிப்பூட்டும் நடைபவனியும் தொடர்ந்து வாக்காளர்களை அறிவுறுத்துகின்ற கூட்டமும் கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேர்தல்கள் திணைக்களத்தால் வாக்காளர்களுக்கான விழிப்பூட்டும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்;தில் வாக்காளர்கள் மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நடைபவனியும் தொடர்ந்து வாக்காளர்களை அறிவுறுத்துகின்ற கூட்டமும் இடம்பெற்றது.

கிளிநொச்சி பஸ் நிலையத்தின் முன்பாக ஆரம்பமான நடைபவனி,  மாவட்டகூட்டுறவு சபை மண்டபம் வரை சென்று, மண்டபத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .