2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மாந்தை மனித புதைகுழியில் இருந்து மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு- 79ஆக அதிகரிப்பு.

Kanagaraj   / 2014 பெப்ரவரி 22 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் அகழ்வுப்பணிகள் இன்று சனிக்கிழமை இடம் பெற்ற போது மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் 29 ஆவது தடவையாக இன்று சனிக்கிழமை குறித்த மனித புதை குழி தோண்டப்பட்டது.
இதன் போதே குறித்த இரண்டு எலும்புக்கூடுகள் உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் கண்டு பிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களின் தொகை 79 ஆக அதிகரித்துள்ளது.

எனினும் அனுராத புரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரெட்ண தலைமையிலான குழுவினர் இன்றைய(22-02-2014) அகழ்வுப்பணியின் போது சமூகமளிக்கவில்லை.

மன்னார் நீதவான் முன்னிலையில் பொலிஸாரும்,தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து பணியில் ஈடுபட்டனர்.எனினும் வைத்திய அதிகாரிகள் குழுவினர் சமூகமளிக்காமையினால் மனித எலும்புக்கூடுகள் வெளியில் எடுக்கப்படவில்லை.

மீண்டும் நாளை ஞாயிற்றுக்கிழமை 30 ஆவது தடவையாக அகழ்வுப்பணிகள் இடம் பெறவுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .