2025 ஜூலை 23, புதன்கிழமை

இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த 24 காணிகள் மீளவும் கையளிப்பு

A.P.Mathan   / 2014 ஜனவரி 03 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சி.சிவகருணாகரன்
 
கிளிநொச்சியில் கடந்த நான்கு வருடங்களாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த 24 காணிகள் இன்று (03) உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. 
 
இன்று பிற்பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள பொழுது போக்கு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு காணி உரிமையாளர்களிடம் ஆவணங்களை கையளித்தனர்.
 
கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் அவர்களது முகாம்களாக இருந்து பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 24 காணிகளே இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 22 காணிகளும், பூநகரியில் ஒரு காணியும், புதுகுடியிருப்பு பிரதேச செயலக விசுவமடு பிரதேசத்தில் ஒரு காணியும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
 
அத்தோடு இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த 20 பேருக்கு வாழ்வாதார உதவியாக பால் மாடுகளும் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .