2025 ஜூலை 21, திங்கட்கிழமை

யாழ்- மன்னார் விபத்தில் 4 பேர் காயம்

Kanagaraj   / 2014 மே 07 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்து மன்னார் நகர சபைக்கு சொந்தமான வாகனம் இன்று(7) மாலை 3.30 மணியளவில் முளங்காவில் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதில் மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பிரதேச சபைகளின் செயலாளர்கள்  காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று புதன் கிழமை(7) காலை இடம் பெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்று முடிவடைந்த நிலையில் மன்னார் நகர சபைக்குச் சொந்தமான வாகனத்தில் மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட்,மன்னார் பிரதேச சபையின் செயலாளர் சி.எம்.ஜெசுனேசன், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதம பொறியியலாளர் எஸ்.முரளிதன் ஆகியோர் பயணித்துக்கொண்டிருந்த வாகனமே கடும் மலையின் காரணமாக முளங்காவில் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.

காயமடைந்த குறித்த வானத்தின் சாரதி உற்பட நான்கு பேர் மன்னார் பொது வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நகர சபைக்குச் சொந்தமான குறித்த வாகனம் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நகர சபை உறுப்பினர் குமரேஸ் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை முளங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .