2025 ஜூலை 30, புதன்கிழமை

கூட்டமைப்பின் வேட்பாளர் உட்பட 50 பேர் கைது

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 16 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் உள்ளிட்ட 50ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம் வவுனியா நகர்ப்பகுதியில் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஆரம்பமாகி மாலைவரை இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) தலைமையிலேயே இந்த பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதில் பிரதேச இளைஞர்கள், ஆதரவாளர்கள் இணைந்து மேற்படி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்றுமாலை தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளையில் அங்கு வந்த வவுனியா பொலிசார் வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்து வவுனியா பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர்.

சுமார் ஒன்றரை மணி நேரத்தின் பின்னர் வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்) உள்ளிட்ட அனைவரையும் அவர்களின் கையெழுத்தைப் பெற்று விடுதலை செய்துள்ளனர். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னம் தாங்கிய வாகனமும், அதன் சாரதியான தனராஜ் என்பவரும் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை. சாரதியையும் வாகனத்தையும் நாளை வவுனியா நீதிமன்றில் ஒப்படைக்க பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருவதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்த விவாகாரம் தொடர்பில் தேர்தல்கள் கண்காணிப்பு குழுக்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .