2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.80 இலட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு: மூவர் கைது

Thipaan   / 2014 ஓகஸ்ட் 04 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கைக்கு கடத்த இருந்த 50 கிலோ கஞ்சாவை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு  (03) மண்டபம் அருகே கைப்பற்றியதாகவும் மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று பேரை கைது செய்து மண்டபம் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக பொலிஸார் தெரிவித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா பொதி செய்யப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிப்பதாக நேற்று (3) இரவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மண்டபம் மற்றும் வேதாளை, தனுஸ்கோடி உள்ளிட்ட கடலோரப்பகுதிகளில் பொலிஸார் தீவிர சோதனை நடத்தினர்.

இதன் போது மண்டபம் மறைக்காயர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை செய்த போது, இலங்கைக்கு கடத்த இருந்த 50 கிலோ கிராம் கஞ்சா மூட்டைகளை பொலிஸார் கைப்பற்றினர்.

மேலும் மண்டபம் அகதி முகாமில் தங்கியிருந்த இலங்கையின் மன்னார் பகுதியைச் சேர்ந்த கபில்தாஸ், சைனஸ் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த பாபு உள்ளிட்ட மூன்று பேரூம் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ கஞ்சாவின் இலங்கை மதிப்பு 80 இலட்சம் ரூபாய்  எனவும் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய குற்றவாயை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X