2025 ஜூலை 23, புதன்கிழமை

'நலம் தரும் பலம்' 101 நாள் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சினால் 'நலம் தரும் பலம்' என்னும் தொனிப்பொருளின் கீழ், பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து 101 நாள் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் வவுனியா அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெற்ற  ஊடகவியலாளர்கள்  சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

பொதுமக்களுக்குச் சிறந்த சுகாதார சேவையை வழங்குவதன் மூலம், அவர்களின் அசௌகரியங்களை குறைக்க முடியும்; என்ற அவசியத்தை  வலியுறுத்தி இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், பின்வரும் வேலைத்திட்டங்களை அமுல்படுத்துமாறு சகல பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கும் அறுவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வேலைத்திட்டங்களாவன,

1.உணவுகளை கையாளும் நிறுவனங்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக உணவுகளை கையாளுபவர்களை   மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தல். 

2.புகைப்பிடித்தலை தடுப்பதற்காக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யாத உணவகங்களை இனங்கண்டு  கௌரவப்படுத்தல்.

3.பாடசாலை மேம்பாட்டுத் திட்டத்தை  திறம்பட செய்வதற்காக ஒவ்வொரு பாடசாலையிலும் தனியான அறையொன்றை ஒதுக்குதல்.

4.முதியோர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சேவை வழங்கும் வகையில் மருத்துவ சிகிச்சை நிலையங்களில் தனியான கருமபீடங்களை அமைத்தல்

5.மருத்துவச் சிகிச்சை நிலையங்களில் நோயாளிகளுக்கான நியமன முறையை அறிமுகப்படுத்தி, ஒவ்வொருவருக்கும் தனியான சந்திப்பு நேரங்களை ஒதுக்குவதால் அவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்க நடவடிக்கை எடுத்தல்.

6.தொற்றா நோய்களுக்கான மருத்துவப் பரிசோதனையை கிராம மட்டத்தில்  மேற்கொள்ளல்.

7.முன்பள்ளிச் சிறார்களுக்கான விசேட மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளல் என்பவையாகும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .