2025 ஜூலை 23, புதன்கிழமை

வடமாகாணத்தில் 101 நாள் விசேட வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 29 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடமாகாண மக்களின் போக்குவரத்து ஒழுங்குகளை சீர்செய்யும்  நோக்கில், 101 நாள் விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம்  திகதியிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

05 மாவட்டங்களிலுமுள்ள தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், பார ஊர்தி உரிமையாளர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் ஆகியவற்றின்  நிர்வாக சபைகளை கலைத்து இந்த வருடத்துக்கான புதிய நிர்வாக சபைகளை உருவாக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கங்களுக்கான வடமாகாண சம்மேளனத்தை  உருவாக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையின் மூலம் அனைத்துச் சங்கங்களும்    புனரமைக்கப்படும். இதனால், இதுவரையில் இருந்துவந்த நிர்வாகச் சிக்கல்கள் நீங்கும் எனவும் அவர் கூறினார்.

மேலும்,  வடமாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபைக்கான சட்டமூலத்தை உருவாக்கவுள்ளதாகவும்  அவர் கூறினார்.

இதன் மூலம் வடமாகாண மக்களுக்கு மிகவும் வினைத்திறன்மிக்க போக்குவரத்துச் சேவையை வழங்க முடியும்.  வீதிப் போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறுபவர்கள் மீது  கடுமையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கப்படும்.   குற்றத்தின் தன்மைக்கேற்ப போக்குவரத்துக்கான வீதி அனுமதிப்பத்திரம் சிலவேளைகளில்; இரத்துச் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .