2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் கடந்த வருடம் 128 குற்றச்செயல்கள்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 04 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் 128 கடும் குற்றச்செயல்கள் இடம்பெற்ற நிலையில்,  65 குற்றச்செயல்களுக்கான சந்தேக நபர்கள் மீது  சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக  மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி துஸார தலுவத்த தெரிவித்தார்.

கடத்தல், கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட  பல்வேறு  குற்றச்செயல்கள் இடம்பெற்றன.

இதில் 95 குற்றச்செயல்களுக்கான சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், 65 குற்றச்செயல்களுக்கான சந்தேக நபர்கள் மீது  சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான  நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.

மேலும், கடந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் 188 கிலோ 560 கிராம் 367 மில்லிகிராம் கஞ்சாவையும்;  03 கிராம் 360 மில்லிகிராம் ஹேரோயினையும் கைப்பற்றியதாகவும் இவற்றை வைத்திருந்த சந்தேக நபர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தியதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .