2025 ஜூலை 23, புதன்கிழமை

புளியமுனை மீனவர்களின் 15 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் திருட்டு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 23 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், புளியமுனை பகுதியிலுள்ள 25 மீனவர்களின் 15 இலட்சம் ரூபா பெறுமதியான 03 படகுகளும்  08 குல்லாக்களும் 25 வலைகளும்  இன்று வியாழக்கிழமை (23) அதிகாலை திருட்டுப் போயுள்ளதென்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், திருடப்பட்ட 03 படகுகளில் 02 படகுகள் அடித்து உடைக்கப்பட்டு கடலினுள் போடப்பட்டுள்ளதென்று தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்.

இதேவேளை, மேற்படி திருட்டுச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.

இந்தத் திருட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் இதுவரையில் அடையாளம்; காணமுடியவில்லையென வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

புல்மோட்டை மீனவர்களுக்கு இது தொடர்பில் சம்பந்தமிருக்கலாம். ஏனெனில், கடந்த 03 தினங்களுக்கு முன்னர் இப்பகுதி மீனவர்களின் வலைகளை கடலில் வைத்து புல்மோட்டை மீனவர்கள் பறித்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.

பல இன்னல்களுக்கு மத்தியில்  ஜீவனோபாயத் தொழிலை மேற்கொண்டுவரும் இம்மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தச் செயலால் அப்பகுதி மீனவர்கள்; வேதனையுடன் கொதித்துப் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .