2025 ஜூலை 23, புதன்கிழமை

மன்னாரில் 2012 இல் கைதானவர்களில் ஐவர் விடுதலை

Kanagaraj   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எச்.அமீர்

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டு அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 பேரும் குச்சவெளி நீதவான் நீதிமன்றினால் நேற்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரில் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் திகதியன்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், பிரமுகர்கள் பலரை கொலை செய்ததாக பயங்கராத தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்;சாட்டி அவர்களுக்கெதிராக குச்சவெளி நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட 9 பேர்களில் 5 பேரே குச்சவெளி நீதவான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .