2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் 21இல் உண்ணாவிரதம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 14 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்திலுள்ள மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளையும் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும்  சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டும் முகமாக எதிர்வரும் 21ஆம் திகதி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மன்னார் மாவட்டத்திலுள்ள பொது அமைப்புக்களும் இணைந்து இந்த உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் மன்னார் ஆகாஸ் விடுதியில் வியாழக்கிழமை (13) நடைபெற்றது.  

மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை, மன்னார் மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழ் மக்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதிகள் ஆகியவற்றுக்கு நீதி கோரி இந்த உண்ணாவிரதத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .