2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாலைதீவு அந்தோனியார் ஆலய உற்சவம் 23 இல்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 13 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிலுள்ள பாலைதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இவ்வருடம் அதிகளவான பக்தர்கள் ஆலய உற்சவத்திற்கு வருகை தருவார்களென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் மார்க்கமான மேற்படி தேவாலயப் போக்குவரத்துக்கு விசேட படகுகள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் பக்தர்களின் நலன் கருதி பாலைதீவில், பூநகரி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கிளையொன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். 

உற்சவ காலத்தில் அமைக்கப்படும் வர்த்தக நிலையங்கள் பூநகரி பிரதேச சபையின் ஒழுங்கு நடைமுறைகளை பின்பற்றி அமைக்கப்பட   வேண்டும்.

பக்தர்கள், வர்த்தகர்கள்; உள்ளிட்டோர் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் அறிவுறுத்தப்படும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
தேவாலயத்தின்  புனித தன்மையைப் பேணும் வகையில் பக்தர்களின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

பக்தர்கள் பெறுமதி மிக்க பொருட்களைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் மாவட்டச் செயலர் கேட்டுக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .