2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

யுத்தப் பாதிப்புக்குள்ளான 280 பேருக்கு காசோலைகள்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 280 பேருக்கு காசோலைகளை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திதிரசிறி கஜதீர வழங்கிவைத்தார்.

யுத்தத்தினால் மரணமானவர்களுக்காக, காயமடைந்தவர்களுக்காக,  சொத்து இழப்புக்காக இந்தக்  காசோலைகள்  வழங்கப்பட்டன.

இதற்னெ புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு 25 மில்லியன் ரூபாவை  ஒதுக்கீடு செய்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ்.விதானகே, புனர்வாழ்வு அதிகாரசபைத் தலைவர் ஜீ.ஏ.எஸ்.சமரசிங்க, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஸ்குமார், புனர்வாழ்வு அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டி.கே.ஜினதாச, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .