2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கரைச்சியில் 3 சமுர்த்தி வங்கிகள்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

சமுர்த்தி அதிகாரசபையின் நிதியில் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிளிநொச்சி நகரம், வட்டக்கச்சி, ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் தலா 02 மில்லியன் ரூபா செலவில்  அமைக்கப்பட்ட சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகள் புதன்கிழமையிலிருந்து (26) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச செயலர் கோபாலப்பிள்ளை நாகேஸ்வரன் தெரிவித்தார்.

மேற்படி சமுர்த்தி வங்கிகளில் பொதுமக்களுக்கான  சேவைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் 42 கிராம அலுவலகர் பிரிவுகள் உள்ளன அடிப்படையிலும் நிலப்பரப்பின் விஸ்தீரணத்தின் அடிப்படையில் 03 சமுர்த்தி வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சமுர்த்தி திட்டம் 2012ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு முழு வீச்சுடன் செயற்படுத்தப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .