2025 ஜூலை 23, புதன்கிழமை

கிளிநொச்சியில் 3,036 முதியோருக்கு உதவித்தொகை

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சினால் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வழங்கப்படும் 1,000 ரூபா உதவித்தொகையை இந்த வருடம்  கிளிநொச்சி மாவட்டத்தில் 3,036 முதியோர்கள் பெற்றுவருவதாக  சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சுகிந்த எஸ்.சிங்கப்புலி தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முதியோர்களுக்கான  மேற்படி கொடுப்பனவுக்காக 37 மில்லியன் ரூபா  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினர்.

கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் 1,510 பேரும்  கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில்  727 பேரும்  பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில்  357 பேரும்  பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் 442 பேரும்  இந்த உதவித் தொகையைப் பெற்றுவருவதாகவும் அவர் கூறினார்.

இந்த உதவித் தொகையை  தங்களது  பிரதேசங்களிலுள்ள தபாலகங்கள் அல்லது உபதபாலகங்களில் பெறமுடியும் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .