2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கறைத்துறைப்பற்றில் 4 வருட அபிவிருத்தி திட்டம் ஆரம்பம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 25 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கறைத்துறைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒருங்கிணைந்த மக்கள் பங்களிப்புடனான நான்கு வருட அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்கும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கறைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலளாளர் எஸ்.ரவீந்தரநாதன் தெரிவித்தார்.

கறைத்துறைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட 55 கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் அக்கிராமங்களிலுள்ள மக்களின் ஆலோசனைகளின் பிரகாரம்; குறித்த திட்டங்கள் தயாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த நான்கு வருட திட்டம்பற்;றி மேலும் கருத்து தெரிவித்த அவர், 'கறைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 46 கிராமங்களிலும், வெலிஓய பிரதேச செயலகத்திற்குட்பட்ட 9 கிராமங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் பற்றி அக்கிராமங்களில் வாழும் மக்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டு அவை அனைத்தும் நான்கு வருட திட்டமாக தொகுக்கப்படவுள்ளன' என்றார்.

'அதன்பின்னர் அத்திட்டங்கள் ஒவ்வொன்றும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. எனவே குறித்த கிராமங்களில் உள்ள மக்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து கொள்ளும் ஆரம்ப நடவடிக்கைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த கிராமங்களில்; நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் அந்தந்த கிராம உத்தியோகஸ்தர்கள் தலமை தாங்குவார்கள். அத்துடன் அபிவிருத்தி உத்தியோகஸ்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் உள்ளிட்ட எமது சபையின் உத்தியோகஸ்தர்களும் கலந்துகொள்வார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .