2025 ஜூலை 21, திங்கட்கிழமை

125 பேருக்கு உலர் உணவுப் பொருட்கள்

Kogilavani   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


வன்னி பார்வையற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வன்னிப் பகுதியில் உள்ள பார்வையற்ற 125 பேருக்கு தலா 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் திங்கட்கிழமை (28) வழங்கப்பட்டன.

சுவிஸ் நாட்டில் இயங்கி வரும் எழுகை அமைப்பின் நிதியுதவியில் இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி, பரந்தனில் அமைந்துள்ள வன்னி பார்வையற்றோர் சங்கத்தில், வன்னி பார்வையற்றோர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரூபராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்;டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சீ.யோகேஸ்வரன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உலர் உணவு பொருட்களை பயனாளிகளிடம் கையளித்தார்.

மேற்படி உலர் உணவுப் பொருட்கள் மாதாந்தம் சுழற்சி முறையில் பார்வையற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .