Editorial / 2019 மே 24 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், வறுமைகோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் சமூர்த்தி நிவாரண கொடுப்பனவு இதுவரை மீள்குடியேற்றப்பட்ட 23 கிராமங்களுக்கு கிடைக்காத நிலையில், அதனை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் சமூர்த்தி திணைக்களம் ஈடுபட்டுள்ளார்.
அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகளை தெரிவின் மீளாய்வு நடவடிக்கைகள் அண்மையில் இடம்பெற்றுள்ளன.
இதன்போது சமுர்த்தி கிடைக்காத புதிய பயனாளிகள் பலர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 11,024 குடும்பங்களுக்கே சமுர்த்திக் கொடுப்பனவு கிடைத்துவருகின்றது
மேலும் 14,713 குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் சமுர்த்தி திணைக்களம் ஈடுபட்டுள்ளது. இதற்கான புள்ளிவிவரங்களையும் கோரிக்கைகளையும் சமுர்த்தி திணைக்களத்திடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025