2025 ஜூலை 23, புதன்கிழமை

15 பேருக்கு பப்பாசிக் கன்றுகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் பகுதியில் பப்பாசிச் செய்கை மேற்கொள்ளும் 15 பயனாளிகளுக்கு ஜ.ஓ.எல் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 1,500 பப்பாசிக் கன்றுகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) வழங்கியதாக கிளிநொச்சி மாவட்ட  விவசாய விரிவாக்கல் பணிப்பாளர் அ.செல்வராசா தெரிவித்தார்.

100 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவருக்கும் 170 கன்றுகள் படி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
எஞ்சியுள்ளவர்களுக்கு  இம்மாத இறுதிக்குள் பப்பாசிக் கன்றுகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பழச் செய்கையை ஊக்குவிப்பதற்காக பல்வேறு செயற்றிட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்;றன. அந்த வகையில் பப்பாசிக் கன்றுகளை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 10 விவசாயிகளுக்கு 2,500 கொடி முந்திரிகை கன்றுகளை  எவ்.ஏ.ஓ நிறுவனம் இலவசமாக வழங்கியதாகவும் அவர் கூறினார். 

அத்துடன், முந்திரிகைச் செய்கைக்கு தேவையான சீமெந்துத் தூண்கள், கம்பி வலைகள் உள்ளிட்ட பொருட்களை  50 சதவீத மானிய அடிப்படையில் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .