2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

150 பேரில் ஒருவருக்கு தொற்று

Niroshini   / 2021 ஜனவரி 11 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சான்

புதுக்குடியிருப்பு - திம்பிலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து 150 பேரில், ஒருவருக்கு, இன்று (11) கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த 150 பேர், 9ஆம் திகதியன்று, நாட்டுக்கு வருகைதந்தனர்.

இவர்களுக்கு,  கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு, புதுக்குடியிருப்பு - திம்பிலி பகுதியில் உள்ள 68ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்களில் ஒருவரே, இன்று தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர், கிளிநொச்சியில் உள்ள கொரோனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .