Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - நானாட்டான் சந்திக்கு அருகில், 'வடக்கு வீதி' எனும் இடத்தில் உள்ள காணி ஒன்றில் இருந்து, மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1,904 நாணயக் குற்றிகளும் சட்டி பானை ஓட்டுத் துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை (18), குறித்த காணியின் உரிமையாளரால் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போதே, இவை வெளிந்துள்ளது.
இது தொடர்பில், நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் ஸ்தலத்துக்கு விரைந்த உப தவிசாளரும், குறித்த நாணயக் குற்றிகள் உள்ளிட்ட பொருள்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இந்த நாணயக் குற்றிகள் யாவும் மன்னார் நீதிமன்றத்தின் ஊடாக தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago