Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 ஜூலை 18 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேறியுள்ள சுமார் 2,703 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவேண்டிய தேவை காணப்படுவதாக, கண்டாவளைப் பிரதேச செயலாளர் ரீ.முகுந்தன் தெரிவித்தார்.
கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள 16 கிராம அலுவலர் பிரிவுகளிலும், 8,314 குடும்பங்களைச் சேர்ந்த 25,969 பேர் வரையில் இதுவரை மீள்குடியேறியுள்ளனர்.
இவ்வாறு குடியேறிய மக்களின் வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ரீ.முகுந்தன், “கண்டாவளைப் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள 8,314 குடும்பங்களில், 5,278 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டங்களே இதுவரை வழங்கப்பட்டுள்ளன. 2,703 புதிய வீடுகளையும் பகுதியளவில் சேதமடைந்த 333 வீடுகளை புனரமைத்துக் கொடுக்கவேண்டிய தேவை காணப்படுகின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .