2021 மே 06, வியாழக்கிழமை

வவுனியா மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 23 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)

வவுனியா மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுக் கூட்டம் வவுனியா அரசாங்க அதிபர் பணிமனை கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நகரசபை செயலாளர், தொண்டர் நிறுவன அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், ஆசிரியர்களென பலர்  கலந்துகொண்டனர்.

பாடசாலை மாணவர்களின் கல்விப் பாதுகாப்பு ஒழுக்கம் போன்றவை விவாதிக்கப்பட்டதுடன்,  இந்தியாவிலிருந்து வரும் மாணவர்களின் கல்வி பற்றியும் தாய், தந்தையரை இழந்த மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இவர்களது கல்வி மற்றும் எதிர்கால நலன்கள் தொடர்பில் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .