2025 ஜூலை 30, புதன்கிழமை

கடற் படையினரை வெளியேற்றுமாறு பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கை

Super User   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றொசேரியன் லெம்பட்

மன்னார் – தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள சிறுத்தோப்பு ஆலயம் ஒன்றிற்குச் சொந்தமான 17 ஏக்கர் காணியில் நிலைகொண்டுள்ள கடற் படையினரை வெளியேற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"சிறுத்தோப்பு ஆலயத்திற்குச் செந்தமான 17 ஏக்கர் காணியில் கடற் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக படையினர் முகாமிட்டு உள்ளனர். குறித்த காணியில் கோயிலுக்கு வருமானம் தரும் வகையில் சுமார் 2,000க்கு மேற்பட்ட தென்னை மரங்களும் 300 இற்கும் மேற்பட்ட பனை மரங்களும் உள்ளன.

ஆனால், தற்போது குறித்த காணியில் பல நூற்றுக்கணக்கான தென்னை மற்றும் பனை மரங்கள் கடற் படையினரினால் வெட்டப்பட்;டுள்ளன. இதனால்அதனை நம்பியிருந்த மக்களும் ஆலய நிர்வாகமும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது குறித்த காணியில் உள்ள கடற் படையின் கஜபா படையணிக்கான முகாம் அமைப்பது தொடர்பாக காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் பிரசுரம் காணி சுவீகரிப்பு உத்தியோகத்தரினால் குறித்த பகுதியில் ஒட்டப்பட்டது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பாரிய கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

எனவே குறித்த காணி சிறுத்தோப்பு ஆலயத்திற்கு சொந்தமானதாக காணப்படுகின்ற நிலையில் அதற்கான சகல விதமான ஆவணங்களும் அவர்களிடம் உள்ளது. எனவே குறித்த காணியில் உள்ள கடற் படையினரை அகற்றி ஆலய நிர்வாக சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்" என குறித்த கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .