2025 ஜூலை 30, புதன்கிழமை

கிழக்கு மாகாணசபை கூட்டமைப்பு உறுப்பினர்கள் வவுனியாவில் பிரசாரம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 13 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.ரி.சகாதேவராஜா


வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்வதற்காக கிழக்கு மாகாணத்திலிருந்து த.தே.கூட்டமைப்பு பிரதிநிதிகள் வடக்குநோக்கி படையெடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் மு.இராஜேஸ்வரன்,மாகாணசபை உறுப்பினரின் செயலாளர் பாக்கியச்செல்வம் புவிராச் உள்ளிட்டேர் வவுனியாவில் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். மன்னாரில் வேட்பாளர் ரி.சிவகரனுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பிரசாரம் செய்தனர். வீடுவீடாகச் சென்று துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.

இதேவேளை     கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் த.கலையரசன் தலைமையிலான குழுவினரும் வடக்கிற்கு விஜயம் செய்துள்ளனர்.
வட மாகாண சபைத்தேர்தலில் வவுனியா மாவட்டத்தில்  போட்டியிடும் எம்.எம் ரதனை ஆதரித்து கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  மு.இராஜேஸ்வரன் மாகாணசபை உறுப்பினர் செயலாளர் பாக்கியச்செல்வம் புவிராச் மேலும் அம்பாறை கட்சி ஆதரவாளர்கள் அன்றையதினம் வவுனியா வேப்பங்குளம் சமணங்குளம் ஆகிய பகுதிகளில் தீவிரமாக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .