2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் நீர் வழங்கல் திட்டம் ஆரம்பித்து வைப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 14 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


மஹிந்த சிந்தனையில் சுத்தமான குடி நீரை மக்களுக்கு வழங்கும் திட்டத்தில் வவுனியா நீர் வழங்கல் திட்டம் வவுனியாவில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தினதும் ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் 5800 மில்லியன் ரூபா நிதியளிப்பில் அமையப் பெறவுள்ள இவ் குடி நீர் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் சுத்தமான குடி நீரை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

சாஸ்திரி கூழாங்குளத்தில் இருந்து நாளொன்றுக்கு 12 ஆயிரம் கன மீற்றர் நீரை சுத்திகரிக்கக்கூடிய நீர் சுத்திகரிப்பு ஆலை அமைத்து 21 கிலோ மீற்றர் நீளமான பிரதான நீர் பரிமாற்றக் குழாய் அமைக்கப்படவுள்ளதுடன் 225 கிலோ மீற்றர் நீளமான விநியோகக் குழாயும் அமைக்கப்பட்டு நெளுக்குளம் மரக்காரம்பளை பூந்தோட்டம் ஆகிய இடங்களில் நீர் தாங்கிகள் அமைக்கப்பட்டு வவுனியா நகரத்திற்கும் நெளுக்குளம், மடுகந்தை, ஈரற்பெரிய குளம், மற்றும் சாஸ்திரி கூழாங்குளம் பகுதிகளுக்கும் குடி நீர் வழங்கப்படவுள்ளது.

குடி நீர் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிஷோர், வன்னி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் சுமதிபால, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் நீர் வழங்கள் அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .