2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி – கே.பி சந்திப்பு

Super User   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது வடமாகாண தேர்தல், அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பு இரணமடுவிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திலலேயே நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பின் வட மாகாண சபை தேர்தலுக்கான பிரசார பணிகளில் ஜனாதிபதி நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டார்.

இதன்பின்னர் இரணமடுவிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கும் அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு   கே.பியை சந்தித்து கலந்துரையாடியதுடன்  செஞ்சோலை சிறுவர் இலத்திலுள்ள சிறுவர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .