2025 ஜூலை 30, புதன்கிழமை

பழுதடைந்த மின்விளக்குகள் திருத்தப்பட்டுள்ளன

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் பிரதான பாலத்தில் உள்ள அதி உயரம் கொண்ட தெரு மின்விளக்குகள் பழுதடைந்து காணப்பட்ட நிலையில், அவை திருத்தப்பட்டு தற்போது ஒளிர்வதாக மன்னார் நகர சபையின் செயலாளர் எல்.பிரிட்டோ தெரிவித்தார்.

மன்னார் பிரதான பாலத்தில் அமைந்துள்ள அதி உயரம் கொண்ட 6 தெரு மின்விளக்குகளும் பழுதடைந்து நீண்டகாலமாக ஒளிராது காணப்பட்டன.  இந்த நிலையில், மன்னார் நகர சபையின் முயற்சியினால் இந்;த தெரு மின்விளக்குகள் கடந்த வாரம் திருத்தி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது திருத்தப்பட்ட இந்த தெரு மின்விளக்குகள் ஒளிர்வதாகவும் அவர் கூறினார்.

இந்த தெரு மின்விளக்குகள் ஒளிராத காலத்தில் இரவு வேளைகளில் பொதுமக்கள் போக்குவரத்துச் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கியிருந்ததுடன், விபத்துக்களும் இடம்பெற்று வந்தன.

தற்போது இந்த தெரு மின்விளக்குகள் திருத்தப்பட்டுள்ளதால் இரவு வேளைகளில் பொதுமக்கள் எந்தவித பிரச்சினையுமின்றி இலகுவாக  தங்களது போக்குவரத்தை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .