2025 ஜூலை 30, புதன்கிழமை

வவுனியாவில் மற்றுமொரு வாக்களிப்பு நிலையத்தில் குளவி கூடு அழிப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 21 , மு.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் வாக்களிப்பு நிலையம் அமைந்துள்ள பட்டானிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் காணப்பட்ட குளவிக்கூடுடொன்று இன்று சனிக்கிழமை காலை வவுனியா மலேரியா தடை இயக்கத்தினர் அழித்துள்ளனர்.

வாக்களிப்பு ஆரம்பமாகுவதற்கு சில நிமிடங்களே உள்ள நிலையில் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் உள்ள மரமொன்றில் காணப்பட்ட குளவிக்கூடே வவுனியா அரசாங்க அதிபரின் உத்தரவின் போரில் மலோரியா தடை இயக்கத்தின் பொறுப்பதிகாரி தி. கோபிநாத் தலைமையிலான குழுவினர் அழித்துள்ளனர்.

 புதுகுளம் மகாவித்தியாலய வாக்களிப்பு நிலையத்திற்கு கடமைக்கு சென்ற அதிகாரிகள் மீது  குளவி கொட்டியதில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .