2025 ஜூலை 30, புதன்கிழமை

மன்னாரில் மோதல்; பெண் காயம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 21 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் தாழ்வுபாட்டில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே  ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து அங்கு இடம் பெற்ற கல்வீச்சுத்தாக்குதலில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

மன்னார் தாழ்வுபாடு புனித வளனார் பாடசாலையில் உள்ள 11 ஆவது வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில்  மோதல் இடம் பெற்றுள்ளது.

அப்பகுதியில் சிலர் கூட்டமாக இருந்ததை அவதானித்த மாற்றுக்கட்சியை சார்ந்தவர்கள் பொலிஸருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து பொலிஸார் அவர்களை துரத்திச் சென்ற சமயம் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்துகொண்டுள்ளனர். துரத்திச்சென்ற பொலிஸாரும் வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்து அங்குள்ளவர்கள் மீது தடியால் தாக்குதல்களை மேற்கொண்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையில் பரஸ்பர கல் வீச்சுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது வீட்டினுள் இருந்த வயோதிபப் பெண் அந்தோனிக்கம் பெரேரா(வயது-65) என்பவர் காயமடைந்துள்ளார்.

தொடர்ந்து நிலவரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர கலகம் அடக்கும் பொலிஸார் தாழ்வுபாட்டு கிராமத்தில் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது ஒரு சில மணி நேரத்தின் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .