2025 ஜூலை 30, புதன்கிழமை

சேதமடைந்துள்ள கமநல சேவை நிலையங்களை புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யுத்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் சேதமடைந்துள்ள கமநலச் சேவை நிலையங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கமநலச் சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பற்றிக் நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கமநலச் சேவை நிலையங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன.

உடையார்கட்டு, குமுழமுனை, புதுக்குடியிருப்பு, பாண்டியன்குளம், கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள  கமநலச் சேவை நிலையங்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

இவற்றைப் புனரமைப்புச் செய்வதற்கான திட்டவரைவுகள் தயாரிக்கப்பட்டு கமநல சேவைகள் அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

சேதமடைந்துள்ள கமநலச் சேவை நிலையங்களுக்கான புனரமைப்புப் பணிகள் கூடிய விரைவில்  மேற்கொள்ளப்படும் எனவும்  அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .