2025 ஜூலை 30, புதன்கிழமை

விபத்தில் ஐவர் காயம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பஸ் வண்டி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் விபத்திற்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மடு பரயனாலன்குளம் பகுதியில் குறித்த பஸ் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதகு ஒன்றுடன் மோதி அருகிலுள்ள வாய்க்கால் பகுதியில் சாய்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்துள்ள பஸ் வண்டிச் சாரதி உட்;பட 5 பேரும் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இவர்களில் இருவர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாகவும் ஏனைய மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  முருங்கன் மாவட்ட வைத்திய அதிகாரி ஒஸ்மன் சாள்ஸ் தெரிவித்தார்.

மதவாச்சியைச் சேர்ந்த பஸ் வண்டிச் சாரதியான பியந்த காமினி (வயது 25,  புத்தளத்தைச் சேர்ந்த எம்.ரி.எம்.ரவுப் (வயது 24), கே.ஜெயின்ஸ் (வயது 56) ஆகிய மூவருமே முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பான விரிவான விசாரணையை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .