2025 ஜூலை 30, புதன்கிழமை

சிறுமி கடத்தப்பட்டு வல்லுறவு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் 14 வயதுச் சிறுமி ஒருவரை 3 பேர் கடத்திச்சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார்.

தனது வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை  நடந்து சென்றுகொண்டிருந்தபோது, வான் ஒன்றில் வந்த மூவர் தன்னை கடத்திச் சென்றதாகவும் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் வவுனியாவின் நகர்ப் பகுதி ஒன்றில் தன்னை விட்டுச்சென்றதாகவும் குறித்த சிறுமி கூறியதாக அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இது தொடர்பில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் உறவினர்கள் நேற்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .