2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

துப்புரவற்ற வெதுப்பகம் முற்றுகை

Super User   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாடாசாமி கோவில் பகுதியில் அமைந்திருந்த வெதுப்பகம் நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியா சுகாதார துறையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது சுகாதாரமற்ற பல திண்பண்டங்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டன என வவுனியா சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். சுகாதார பிரிவிற்கு பொதுமக்கள் வழங்கிய முறைப்பாடுகளை அடுத்து இந்த திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி கே.ஜீவராஜா, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.மேஜெயா, பொது சுகாதார பரிசோதகர்களான கே.சிவரஞ்சன் மற்றும் எம். ரஞ்சன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பல திண்பண்டங்கள் மீடகப்பட்டதுடன் சுகாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்கள் கைப்பற்றி அழித்திருந்தனர்.

இதேவேளை, இங்கு உற்பத்தி செய்யப்பட்ட  குளிர்பான பக்கற்றுக்களில் வேறு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுவதாக போலியான முகவரியும் பொறிக்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது.இதனால குறித்த வெதுப்பகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக வவுனியா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .