2025 ஜூலை 30, புதன்கிழமை

வட மாகாண அமைச்சரவையில் முல்லைத்தீவையும் உள்வாங்குமாறு கோரிக்கை

Super User   / 2013 செப்டெம்பர் 26 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வட மாகாண அமைச்சரவைக்கான தெரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை பிரதிநித்துவப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை வெற்றி பெற்ற நான்கு உறுப்பினர்களினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா மற்றும் முதலைமைச்சர் விக்கினேஸ்வரன் ஆகியோரிடம் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"முல்லைத்தீவு மாவட்டம் யுத்தத்தினாலும் சுனாமியாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் யுத்த்திற்கு பின்னர் பெருமளவான பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளதோடு பெரும் எண்ணிக்கையானவர்கள் அங்கவீனர்கள் உள்ளனர்.

நாட்டில் இருக்கின்ற 25 மாவட்டங்களில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அற்ற ஒரு மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் இருக்கிறது. இங்கு வாழும் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற அன்றாட பிரச்சனை முதல் அரசியல் பிரச்சினை வரை எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்குரிய ஒரு தலைமைத்துவம் இல்லாத நிலை காணப்படுகின்றது" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .